வாழும் காலங்கள் யாவும் வாழ்வதற்கே
வாழ்ந்து தான் பார்ப்போமே
வாசம்வீசிடும் பூப்போல் சிரித்திடுவோமே
வாருங்கள் வாழ்ந்து பார்ப்போமே
செல்லும் பாதை இங்கே பார்த்தால்
கல்லும் முள்ளும் கரடும் முரடும்
கண்கள் திறந்தே நாமும் வைத்தால்
காலம் முழுதும் மகிழ்வோமே
உள்ளம் முழுதும் உண்மை வைத்தால்
உன்னை வெல்ல உலகில் எவருமில்லை
வெள்ளம் போலே இன்பம் பொங்கும்
வேறு வாழ்வில் ஏதுமில்லையே
சொல்லச்சொல்ல நீயும் திருந்து
சோகம் தீரும் உன்னைக் களைந்து
சொந்தபந்தம் எல்லாம் உணர்ந்து
சொர்க்கமாகும் வாழ்க்கை விருந்து
கோலத் தமிழ் வாழ....!!!
ஆலம் விழுதுகளாய்
ஆனமட்டும் வாழவோமே- தமிழ்
கோலம் தனைப் பணிந்து
கோலோட்ச்சும் காலம் வரை
ஞாலம் புகளுமெங்கள்
ஞாயிராம் தலைவனவன்
காலம் தமிழீழம்
கறந்தெடுக்கும் நாள் வரைக்கும்
ஓலம் இட்டொருநாள்-எதிரி
ஓடுவது திண்மமென்று
சாலப் பொருந்தி நிற்கும்
சமர்க் களங்கள் சொல்லிநிற்க - தேசம்
சீலம் பெற்றுயர - எம்
சிறுவர்க்கு தமிழ் கல்விதந்து
கோலத் தமிழ் வளர
கொண்டிடுவோம் இலட்சியமாய்
புலத்தினுள்ளோம் என்பதனால் - தமிழை
புறம் தள்ளித் பாராது - அதன்
நலமொன்றே நெஞ்சிலேந்தி
நற் குடியாய் உயர்வோமே
ஏலம் போட்டு விற்றோம்
ஏதிலிகள் நாமென்று - தமிழ்
ஈழம் தனையடைந்து - எம்
இளையோரை விடுவிப்போம்
வாழ்க்கை என்னும் ஓடம் மாற்றங்களாய் மாறியபோது. மௌனத்தின் பார்வை மட்டும் போதும் என்றேன். ஏக்கங்களாக இருந்த விழி பார்வையால் பார்த்தபோது. உன் இரு கருவிழியில் பணப்பேய் நடமாடியது. ஏங்கினேன் நம்பவில்லையடி உனை. காரணம் புரியவில்லை. என் பாசம் ரோசத்தை மறைத்தது. வார்த்தைகள் தடுமாறி வாய் ஊமையானது. வந்த குடியை கெடுத்து உள்ளங்களை சிதறடித்தாய். உன் முடிவரைக்குள் முகவரியை மாற்றிவிட்டாய்.
நீ.....போடும் வேஷமோ.... சமுதாயத்தில் சீ.....ர் கெட்ட வேஷம் இருள் கொண்ட போர்வைக்குள் நீ....மட்டும் புகுந்ததால் உனக்கு மட்டுமே உனை தெரியும். போடி.....போ...... உனது உருவம் உருவெடுத்து ஆடுகின்றது இம்மண்ணில். உனது அகந்தை அழிந்து உனை நீ....யே.. பார்க்கும் போது தனிமையில் இருப்பாய். அப்போது தேடும் உன்விழி எங்கே உறவுகள் என்று. முகவரியை தரமறுக்கும் பெண்ணே..... உனக்கிது சமர்ப்பனம்.
தென்றலுக்கோ மலர்மீது தீராக் காதல் தேன்சுரக்கும் மலருக்கோ வண்டில் காதல் தென்றலோ காதலால் பூமீது மோதும் தெரிந்தாலும் வண்டந்த வண்டோடு போகும்!
சலசலக்கும் அருவிக்கோ நதியில் காதல் சஞ்சரிக்கும் நதியதற்கோ கடலில் காதல் அருவிதினம் ஊற்றெடுத்து நதியில் பாயும் அலைகடலில் தலைவைத்து நதியும் சாயும்!
பஞ்சுநிகர் முகிலதற்கோ நிலவில் காதல் பனிபடர்ந்த மலைமீதே நிலவின் காதல் கெஞ்சிமுகில் சிலவேளை நிலவைப் பார்க்கும் கொஞ்சிவிட நிலவந்த மலையை நோக்கும்!
இமைகளுக்கோ கண்மீது இருக்கும் காதல் இருவிழிக்கும் அதைமீறி அப்பால் காதல் இமைமூடித் தனையந்த விழிக்குக் காட்டும் இருவிழியும் அதைவிட்டு வெளியே நோக்கும்!
வான்மழைக்கு நிலன்மீது வளரும் காதல் வன்நிலமோ நெருஞ்சிக்கே மார்பு காட்டும் வான்மழையின் மென்துளியை விரும்பா மண்ணோ வளர்நெருஞ்சி முட்கீறும் நோவுக்கு ஏங்கும்!
தனையடக்கித் திசைவகுக்கும் துடுப்பைக் காவிக் காதலித்து மகிழ்ந்திருக்கும் ஓடம் என்றும் அலையெனும்கை மெதுவாக எடுத்து ஏந்தும் ஆறுகளைப் பார்க்காது இதுதான் காதல்!